இந்த பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத், பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி மற்றும் ஜெர்மனி சான்சலர் ஃபிரிட்ரிக் மெர்ஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெளியீடு சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் பதற்றத்தின் பின்னணியில் வெளியாகியிருப்பதால் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை தனது தந்தையின் கொலைக்கு பழிவாங்கப்படும் என ஈரானின் உயர்மட்ட தலைவர் மொஜ்தபா கமேனி அண்மையில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
































