பாக்தாத் ஹோட்டல் அமெரிக்க தூதரகம் மற்றும் நாட்டின் தெற்கே உள்ள ஒரு பெரிய எண்ணெய் வயலை குறிவைத்து நடந்த தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களை ஈராக் அரசு கண்டித்துள்ளது.
இவை நாட்டின் பாதுகாப்புக்கும் ஸ்திரத்தன்மைக்கும் பெரிய அச்சுறுத்தலாகும் என்று அறிவித்துள்ளது. பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி தனது செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையின் படி,
“இந்தச் செயல்களைச் செய்தவர்களைத் துரிதமாக கண்டறிந்து உடனடியாக நீதியின் முன் நிறுத்தி அவர்களுக்கு தகுதியான தண்டனை வழங்க வேண்டும்” என பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டார்.
மேலும் பல தகவல்களுக்கு நமது பிரத்தியோக செய்தி தளத்தினை நாடுங்கள்
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது இந்த குற்றச் செயல்கள் நமது நாட்டிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன மேலும் மறுகட்டமைப்பு மற்றும் செழிப்புக்கான அரசாங்கத்தின் முயற்சிகளை பாதிக்கின்றன என்றும் தெரிவித்திருந்தது.

































