கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த இஷாரா இன்று (10) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது வழக்கு தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையையும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அதனைத் தொடர்ந்து அவரை ஆகஸ்ட் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கனேமுல்ல சஞ்சீவ கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பான விசாரணைகளில் இஷாரா செவ்வந்தி முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.






























