முன்னைய புகார் குறித்து ரஞ்சன் குமார் கேள்வி
கடந்த ஆட்சிக் காலத்தில், ஜெம் வீரமணி குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வீடியோக்களின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய முடியவில்லை என்று கூறி, வழக்கை முடித்து வைப்பதாக காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையின் விசாரணையில் திருப்தியடையாத நீதிபதி பத்மா, இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, ஜெம் வீரமணியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்களை காவல்துறை கண்டறிந்து, அவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அவரை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பட்டியலினப் பிரிவு தலைவரான ரஞ்சன் குமார், காவல்துறை உயரதிகாரி கண்ணன் மற்றும் ஆய்வாளர் மகேஷ் ஆகியோருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளையும் புகார் மனுவையும் வெளியிட்டுள்ளார். Jem Veeramani case தொடர்பாக முன்கூட்டியே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததற்கான காரணத்தை காவல்துறை விளக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

































