இதனையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் அலுவலகத்தினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாக அலுவலகத்திற்கு அண்மையில் உள்ள பாழடைந்த கிணற்றில் அவரது சடலம் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சடலம் மீட்கப்பட்டு மேலதிக பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழப்புக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
காணாமல்போன அரச அதிகாரி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அனுராதபுரம் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆரட்சி பன்டாரகே சந்திர வன்சல கோசல விஜய சேகர என்பவர் கிளிநொச்சி ஜெயபுரத்தில் அமைந்துள்ள வட்டார வனவளத் திணைக்கள அலுவலகத்தில் கடமையாற்றி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.































