பசறை (பதுளை மாவட்டம்) ரிடிகம (குருநாகல் மாவட்டம்), மாத்தலையின் நாவுல, அம்பங்கங்க, கொரலே மற்றும் ரத்தோட்ட பகுதிகள் மொனராகலை மாவட்டத்தின் பதல்கும்புர மற்றும் வெல்லவாய பகுதிகள் மேலும் ரத்தினபுரி மாவட்டத்தின் கொடகெவல பகுதிகள் உள்ளிட்ட இடங்களுக்கு இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு அபாயம் “மட்டம் 1 (மஞ்சள் எச்சரிக்கை)” ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறும் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தொடர்ச்சியான மழை காரணமாக மண்ணின் நிலைமை தளர்ந்து காணப்படுவதால் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவசர நிலைமைகளில் உடனடியாக உள்ளூராட்சி அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறும் NBRO பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.




























