மக்கா நுழைவு தடை – வெளிநாட்டவர்களுக்கு சவுதி அரசு எச்சரிக்கை.
சவுதி அரேபிய அரசு ஹஜ் கால ஏற்பாடுகளை முன்னிட்டு அதிகாரப்பூர்வ அனுமதி (permit) இல்லாத வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் (expatriates) மக்கா நுழைவு தடை செய்துள்ளது. இந்த உத்தரவு திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
அதிகாரிகள் தெரிவித்ததாவது வேலை அனுமதி மக்காவில் வழங்கப்பட்ட இகாமா (residency permit) அல்லது ஹஜ் அனுமதி போன்ற செல்லுபடியாகும் ஆவணங்கள் உள்ளவர்களுக்கு மட்டும் நகருக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும். இதற்கு தேவையான அனுமதிகளை “Absher” மற்றும் “Muqeem” போன்ற ஆன்லைன் தளங்கள் மூலம் பெற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அனுமதி இல்லாமல் மக்காவுக்கு வர முயற்சிக்கும் நபர்கள் நகர நுழைவு சோதனைச்சாவடிகளில் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை ஹஜ் காலத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் யாத்திரிகர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் மேற்கொள்ளப்பட்டதாக அரசு விளக்கியுள்ளது. மேலும் ஹஜ் விசா இல்லாமல் மக்காவில் தங்குவது அல்லது நுழைவது சட்டவிரோதமாகும் என்றும் விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.





Leave a Reply