இந்தச் செயற்பாடுகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன் அரசின் விதிமுறைகளும் மீறப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக உள்ளூர் மக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
மன்னாரில் மணல் முறைகேடு ‘டித்வா’ பேரிடர் பெயரில் சட்டவிரோத செயற்பாடுகள்
மன்னார் மாவட்டத்தில் ‘டித்வா’ இயற்கைப் பேரிடரால் குவிக்கப்பட்ட மணலை அகற்றுவதற்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிய மணலை அகற்றும் நோக்கில் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட அனுமதிகள் குறிப்பிட்ட சில தரப்பினரால் வர்த்தக நோக்கங்களுக்காகவும் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


































