இந்த வழக்கில் மூத்த மகள் எநேயா உயிரிழந்தார். 2019 நவம்பர் 13 அன்று டாக்ஸில் உள்ள குடும்ப வீட்டில் அவர் சுயநினைவின்றி கிடந்தார். ஆறு நாட்களுக்குப் பின்னர் அவர் உயிரிழந்தார். இளைய மகள் லுவான் உயிர் பிழைத்தார். தனது முன்னாள் துணைவர் யானிக் ரெவெர்டியை கொலை செய்ய ஏற்பாடு செய்ததாகவும் டோபன் மீது குற்றம் சாட்டப்பட்டு, முதல் விசாரணையில் தண்டனை வழங்கப்பட்டது.
தீர்ப்பை உறுதி செய்யக் கோரும் தந்தை
முன்னாள் பிரான்ஸ் சர்வதேச கைப்பந்து வீரரான யானிக் ரெவெர்டி, இந்த வழக்கில் சிவில் தரப்பாக இணைந்துள்ளார். தனது மகள் எநேயாவின் குரலை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக நீதிமன்றத்துக்குச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார். முதல் தீர்ப்பு எநேயா, லுவான் மற்றும் தமக்கான நீதியாக இருந்ததாகவும், அது உறுதி செய்யப்படும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
மேல்முறையீடு காரணமாக தங்களது குடும்பம் தொடர்ந்து நிச்சயமற்ற நிலை மற்றும் வேதனையில் இருப்பதாக ரெவெர்டி தெரிவித்துள்ளார். தனது இளைய மகளின் பாதுகாப்பு குறித்து எப்போதும் அச்சத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார். Maylis Daubon appeal trial தமக்கு இந்த நீண்ட கால வேதனையிலிருந்து ஒரு முடிவைத் தர வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார்.































