மேலும் நாட்டிலுள்ள அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களும் அரசாங்கம் அறிவித்துள்ள உத்தரவாத விலையில் நெல்லைக் கொள்முதல் செய்ய கொள்கை ரீதியாக இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இந்த வேலைத்திட்டம் சீராக அமுல்படுத்தப்படுவதற்கான நடைமுறை ஏற்பாடுகள் மற்றும் தேவையான ஒத்துழைப்புகளை உறுதி செய்வது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் மூலம் விவசாயிகளுக்கு தங்களது விளைபொருளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதுடன் சந்தையில் அரிசி விநியோகத்தை நிலைநிறுத்தவும் உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.































