இரவு 11 மணியளவில் அந்தப் பெண் தனது 18 வயது மகளுடன் காட்கோபர் ரயில் நிலையத்திற்கு வந்தார். கடாவ்லி செல்வதற்காகப் புறநகர் ரயிலை எதிர்பார்த்திருந்த அவர், நடைமேடையின் ஒரு முனையில் இருந்த கழிவறைக்குச் சென்றார். அந்த நேரத்தில் அங்கு ஊழியர்கள் யாரும் இல்லை.
கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் விசாரணை
பெண்ணை ரகசியமாகப் பின்தொடர்ந்து கழிவறைக்குள் சென்ற நபர், கதவை உள்பக்கமாகப் பூட்டியதாகக் கூறப்படுகிறது. பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் முகம் மற்றும் நெஞ்சுப் பகுதியில் அவர் தாக்கியதாகவும், பின்னர் தப்பிச் சென்றதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வெளியே வந்த பெண், நடந்ததை தனது மகளிடம் தெரிவித்தார். இருவரும் ரயில்வே போலீஸில் புகார் செய்தனர். இதையடுத்து, ரயில் நிலையக் கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அந்த நபர் காட்கோபர் மெட்ரோ ரயில் மூலம் சென்று, அசல்பா மெட்ரோ நிலையத்தில் இறங்கியது பதிவுகளில் தெரியவந்தது.
அதன் அடிப்படையில் போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். அவர் தஸ்லிம் நூர் மொகமத் ஷா, 27, என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த Mumbai railway station rape case தொடர்பாக அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் போதையில் இருந்திருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.































