இந்த மெதுவான மாற்றம் “caregiver creep” என அழைக்கப்படுகிறது. இது மருத்துவத் துறையின் அதிகாரப்பூர்வ சொல் அல்ல. இருப்பினும், குடும்ப உறுப்பினர்களின் பராமரிப்பு பொறுப்பு எவ்வாறு படிப்படியாக அதிகரிக்கிறது என்பது குறித்து நிபுணர்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.
முழுநேர பராமரிப்பு உருவாகும் அறிகுறிகள்
அமெரிக்காவில் 2025ஆம் ஆண்டின் ஆய்வறிக்கையின்படி, 6.3 கோடி பேர் பராமரிப்பாளர்களாக உள்ளனர். நான்கு பெரியவர்களில் ஒருவர் இப்பொறுப்பை ஏற்கிறார். அவர்களில் 94 சதவீதம் பேர் பெரியவர்களை கவனிக்கின்றனர். அமெரிக்க தொழிலாளர் புள்ளிவிவர அமைப்பின்படி, ஊதியமில்லா பராமரிப்பாளர்களில் 59 சதவீதம் பெண்கள்.
குளிப்பது, உடை அணிவது, சாப்பிடுவது, கழிப்பறை பயன்படுத்துவது போன்றவை அன்றாட வாழ்வுப் பணிகள். பணம் நிர்வகித்தல், சமைத்தல், வாகனம் ஓட்டுதல், தொலைபேசி அழைப்புகள் மற்றும் கடைக்குச் செல்வது போன்றவை கருவிசார் அன்றாடப் பணிகள். இவற்றில் உதவி தேவைப்படுவது பராமரிப்பு அதிகரிக்கும் அறிகுறியாக இருக்கலாம்.
ஒரே உடையை தொடர்ந்து அணிதல், தொலைபேசிக்கு பதிலளிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளுதல் அல்லது வீட்டில் உணவு இல்லாமை போன்ற மாற்றங்களையும் கவனிக்க வேண்டும். முதியவர்களின் நலன் தொடர்பான வருடாந்திர மருத்துவச் சந்திப்பில், குடும்ப உறுப்பினர் ஒருவர் கலந்து கொண்டு தேவைகளைப் புரிந்துகொள்ளலாம்.
பொறுப்பை பகிர்வது அவசியம்
தேவைகள் மாறியுள்ளதை முதியவருடன் திறந்த உரையாடலில் பேசுவது முதல் படியாகும். முடிவுகளை தனியாக எடுக்காமல், குடும்பத்தினருடன் இணைந்து திட்டமிட வேண்டும். சமூகப் பணியாளர், உள்ளூர் முதியோர் மையம் அல்லது மருத்துவமனை மூலம் போக்குவரத்து, உணவு மற்றும் சமூக ஆதரவு சேவைகளைப் பெறலாம்.
முழுநேர பராமரிப்பு பணியில் செலவுகள், வேலை நேர இழப்பு மற்றும் மன அழுத்தம் ஏற்படலாம். எனவே, உதவியை முன்கூட்டியே திட்டமிடுவது முக்கியம். பராமரிப்பாளர்கள் தங்களது உடல்நலம் மற்றும் ஓய்வையும் கவனிக்க வேண்டும். ஆதரவுக் குழுக்கள் மற்றும் சமூகப் பணியாளர்களின் உதவி தனிமையையும் சோர்வையும் குறைக்கலாம்.

































