நீட் (NEET) வினாத்தாள் கசிவைத் தடுக்கும் வகையில் புதிய சட்டமூலமும் தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களும் கொண்டு வரப்படவுள்ளதாக அவர் அறிவித்திருந்த காணொளியே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த ரீல்ஸுக்கு இதுவரை 1 கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமான ‘லைக்’களும் பதிவாகியுள்ளன. முன்னதாக உலகக் கோப்பை காலத்தில் பிரபல யூடியூபர் IShowSpeed BTS குழுவினரை சந்தித்துக் கொண்ட காணொளி 24 மணி நேரத்தில் 30 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை படைத்திருந்தது.
தற்போது பிரதமர் மோடியின் இந்த ரீல்ஸ் அந்த சாதனையை முறியடித்து ஒரே நாளில் அதிக பார்வைகளைப் பெற்ற இன்ஸ்டாகிராம் காணொளி என்ற புதிய உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது. இந்த வரவேற்புக்கு மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி, தமக்கு ஆலோசனைகள் வழங்கிய இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.































