கொழும்பில் திங்கட்கிழமை (6) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் இந்தச் சம்பவத்தில் சுமார் 25 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் அரசாங்கமோ சிறைச்சாலைகள் திணைக்களமோ இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கமொன்றையும் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.
மேலும் சம்பவத்தை பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலாக சித்தரிக்கும் வதந்திகளை பரப்புவதற்குப் பதிலாக உண்மையான நிலைமையை மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் இதனால் கைதிகளின் உறவினர்கள் பெரும் அச்சத்தில் சிறைச்சாலையைச் சூழ்ந்து காத்திருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கை சிறைச்சாலைகளில் கொள்ளளவை விட பல மடங்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதால் மனிதாபிமானமற்ற சூழ்நிலை நிலவுவதாகவும் இந்த நெருக்கடியே இவ்வாறான வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் கடந்த மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் பெயரில் சிறிய அளவிலான பயனாளர்களை மட்டுமே கைது செய்து சிறைகளை நிரப்பியுள்ளனவே தவிர பிரதான கடத்தல் வலையமைப்புகளை ஒழிக்கத் தவறியுள்ளதாகவும் இந்தக் கொள்கைகளின் விளைவாகவே தற்போதைய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி சம்பவம் குறித்து அரசாங்கம் வெளிப்படையான விளக்கத்தை வழங்க வேண்டும் என






























