பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கில், நிஷாந்தை காவல்துறையினர் ஐந்து நாட்களாகத் தேடி வந்தனர். அவர் பைக், வாடகைக் கார், பேருந்து என பல்வேறு போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்தி தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலும் தேடுதல் நடைபெற்றது.
பேருந்து ஓட்டுநர் அளித்த தகவலால் கைது
பெங்களூரிலிருந்து சேலம் நோக்கி வந்த ஆம்னி பேருந்தில் நிஷாந்த் பயணம் செய்துள்ளார். அவரது செயல்பாடுகளில் சந்தேகமடைந்த பேருந்து ஓட்டுநர், அதியமான் கோட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டி பைபாஸ் பகுதியில் பேருந்தை நிறுத்திய காவல்துறையினர், நிஷாந்தை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் ஜன்னல் வழியாகத் தப்பிக்க முயன்றதாகவும், காவல்துறையினர் அவரைச் சுற்றிவளைத்து கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் மதுரையிலிருந்து தனிப்படை காவல்துறையினர் தர்மபுரிக்கு விரைந்தனர்.
முன்னதாக, நிஷாந்தின் தோழி மீனாட்சி மற்றும் அவரது தந்தை சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். நிஷாந்திடம் நடைபெறும் விசாரணையின் மூலம் மீதமுள்ள தங்க நகைகள் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளன, கொள்ளை எவ்வாறு நடைபெற்றது என்பதற்கான விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Nishanth arrested in Dharmapuri சம்பவத்துக்குப் பிறகு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.




























