பெங்களூரிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற அந்தப் பேருந்து, தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டி பைபாஸ் பகுதியில் சென்றபோது காவல்துறையினர் அதை நிறுத்தினர். அப்போது நிஷாந்த் ஜன்னல் வழியாகத் தப்பியோட முயன்றதாகவும், காவல்துறையினர் அவரைச் சுற்றிவளைத்து கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து நாட்கள் தேடுதலுக்குப் பிறகு கைது
நகைக்கடை கொள்ளை வழக்கில் நிஷாந்தை காவல்துறையினர் ஐந்து நாட்களாகத் தேடி வந்தனர். அவர் பைக், வாடகை கார் மற்றும் பேருந்து என வெவ்வேறு போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்தித் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. சேலம், தர்மபுரி, ஓசூர் மற்றும் பெங்களூரு பகுதிகளிலும் தேடுதல் நடைபெற்றது.
இந்த வழக்கில் நிஷாந்தின் தோழி மீனாட்சி மற்றும் அவரது தந்தை சுரேஷ் ஆகியோர் முன்னதாக கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். Nishanth jewellery robbery arrest தொடர்ந்து, நிஷாந்திடம் நடைபெறும் விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட மீதமுள்ள தங்க நகைகள் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளன, கொள்ளை எவ்வாறு நடத்தப்பட்டது என்பது குறித்த தகவல்கள் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மதுரையிலிருந்து தனிப்படை காவல்துறையினரும் தர்மபுரிக்கு விரைந்துள்ளனர்.





























