இந்தச் செய்திகள் மூலம் பயனாளர்களை போலியான இணையதளங்களுக்கு அழைத்துச் சென்று அபராதம் செலுத்தும் பெயரில் தனிப்பட்ட மற்றும் வங்கி தகவல்களை திருடும் முயற்சிகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மோசடி செய்பவர்கள் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ GovPay தளத்தைப் போன்ற தோற்றம் கொண்ட போலி இணையதளங்களை உருவாக்கி, பொதுமக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறான இணையதளங்களில் வங்கி அட்டை விவரங்கள், தனிப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளை பதிவு செய்வது ஆபத்தானது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.Sri Lanka News
பொதுமக்கள் SMS அல்லது WhatsApp மூலம் வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை திறக்க வேண்டாம் என்றும் எந்தவொரு பணப்பரிவர்த்தனைக்கும் முன்பு இணையதள முகவரியின் உண்மைத்தன்மையை உறுதி செய்யுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் போக்குவரத்து அபராதங்கள் அதிகாரப்பூர்வ நடைமுறைகளின் கீழ் மட்டுமே செலுத்தப்பட வேண்டும் எனவும் சந்தேகத்திற்குரிய செய்திகள் கிடைத்தால் அவற்றை உடனடியாக நீக்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
































