சாலையோரம் தூங்கியபோது குழந்தை மாயம்
லாலாபேட்டையைச் சேர்ந்த நாடோடி சமூக தம்பதி சேகர் மற்றும் பிரேமா. இவர்கள் குப்பைகளில் இருந்து பழைய பொருள்கள், பாட்டில்களை சேகரித்து காயலான் கடையில் விற்று வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மகேஸ்வரி என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்தார்.
கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி இரவு, ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வானாபாடி மாணிக்கம் நகர் பகுதியில் பழைய பொருள்களைச் சேகரித்துவிட்டு, குழந்தையுடன் சாலையோரமாக இருவரும் தூங்கினர். நள்ளிரவு 1 மணியளவில் குழந்தை காணாமல் போனது தெரியவந்தது.
பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால், மறுநாள் செப்டம்பர் 24ஆம் தேதி பெற்றோர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். குழந்தையின் புகைப்படத்துடன் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
குழந்தை தொடர்பாக எந்தத் துப்பும் கிடைக்காததால், விசாரணை கிடப்பில் போடப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஏ.டி.எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீஸார் குழந்தை மாயமான வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். Ranipet missing girl case தொடர்பாக இதுவரை உறுதியான தடயம் கிடைக்காத நிலையில், குழந்தைக்கு என்ன ஆனது என்ற கவலையில் பெற்றோர் தவித்து வருகின்றனர்.




























