இதனால் கடற்படை மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர் மறு அறிவிப்பு வரும் வரை குறித்த கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை புத்தளம் முதல் காலி வரையான கடல் பகுதிகள், கொழும்பு ஊடாக அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. Sea Weather Warning
கடலில் பயணிக்கும் கடற்படை மற்றும் மீனவர்கள் எதிர்வரும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிவுறுத்தல்களை தொடர்ந்து கவனிக்குமாறும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். கடல் பயணங்களை மேற்கொள்ளும் அனைவரும் தற்போதைய வானிலை நிலைமைகளை கருத்தில் கொண்டு அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.































