வாகனத்தில் மணல் ஏற்றப்பட்டு அதன் மேல் பொச்சு மட்டைகள் பரப்பி மறைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நீண்டகாலமாக இந்த முறையில் மணல் பருத்தித்துறை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சாரதியுடன் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொச்சு மட்டைக்குள் மணல் கடத்தல்
கிளிநொச்சியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளுக்குள் மணலை மறைத்து சட்டவிரோதமாக கடத்தியதாக சந்தேகிக்கப்படும் வாகன சாரதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பளை பகுதியில் இருந்து தென்னம் பொச்சு மட்டைகளை ஏற்றி செல்வது போல் தோற்றமளித்த வாகனத்தில் அனுமதிப்பத்திரமின்றி மணல் கடத்தப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.































