சிவா சர்மா உயிரிழந்த பின்னர் ஸ்ரத்தா தலைமறைவானதாக போலீஸார் கூறினர். அவர் லக்னோவில் இருந்து நேபாளத்திற்குச் சென்றதாகவும், பின்னர் லக்னோ, ஆக்ரா, ஜான்சி வழியாக மகாராஷ்டிராவின் நாக்பூரை அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் சகோதரி ரேஸ்மா மற்றும் டிரைவர் டேனீஷும் இருந்தனர்.
நாக்பூரில் கைது; ‘Z’ கும்பல் தொடர்பு விசாரணை
சிறப்புப் படை போலீஸார் கண்காணிப்பின் மூலம் மூவரும் நாக்பூரில் இருப்பதை கண்டறிந்து கைது செய்தனர். அங்கிருந்து தப்பிச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மும்பையில் செயல்படும் ‘Z’ எனப்படும் ஜுல்பிகர் கும்பல், ஸ்ரத்தாவுக்கு நாக்பூரில் அடைக்கலம் வழங்கி, பண்ணை வீட்டில் தங்க ஏற்பாடு செய்ததாக போலீஸ் வட்டாரங்கள் கூறின. ஆனால் அவர்கள் அங்கு செல்வதற்கு முன்பே கைது செய்யப்பட்டனர்.
‘Z’ கும்பல், தாவூத் இப்ராஹிமின் ‘D’ கும்பல் போன்று செயல்பட்டதாகவும், மும்பை மேற்கு புறநகர்ப் பகுதிகளில் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பார்ட்டிகளில் போதைப்பொருள் விநியோகம் செய்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறினர்.
Shraddha Dubey case விசாரணையில், ஸ்ரத்தாவிடம் இருந்து மூன்று ஐபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர் கொலைக் குற்றச்சாட்டுகளை மறுத்து, சிவா சர்மா தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். சிவா சர்மாவுக்கு ரூ.20 லட்சம் கடன் இருந்ததாகவும், அதைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக அவர் கூறியதாகவும் ஸ்ரத்தா தெரிவித்தார். போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
































