சோமாலியாவைச் சேர்ந்த முதல் உலகக் கோப்பை நடுவராக வரலாறு படைக்கவிருந்த அவர் செல்லுபடியாகும் ஆவணங்களுடன் பயணித்திருந்த போதிலும் அமெரிக்காவில் நுழைய முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அவரது உலகக் கோப்பை பங்கேற்பு தொடர்பிலும் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த சம்பவம் கால்பந்து உலகில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளதுடன் விளையாட்டு மற்றும் அரசியல் விவகாரங்கள் ஒன்றோடொன்று கலக்கப்படக்கூடாது என்ற கருத்துகளும் வலுப்பெற்றுள்ளன. பல்வேறு விளையாட்டு அமைப்புகள் இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 உலகக் கோப்பை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள நிலையில் வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ரசிகர்களின் பயண ஏற்பாடுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்நிலையில் ஏற்பட்டுள்ள இந்த சோமாலிய நடுவருக்கு நுழைவு மறுப்பு விவகாரம் சர்வதேச கால்பந்து வட்டாரங்களில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.உலகின் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவுக்கு முன்பாக உருவாகியுள்ள இந்த சர்ச்சைக்கு சம்பந்தப்பட்ட தரப்புகள் எவ்வாறு பதிலளிக்கின்றன என்பது தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
































