ஸ்பெயினின் MoMo (Daily Mortality Monitoring System) கண்காணிப்பு அமைப்பு, தினசரி மரண எண்ணிக்கையை முந்தைய ஆண்டுகளின் சராசரி தரவுகளுடன் ஒப்பிட்டு அந்நாள்களில் நிலவிய வானிலை தகவல்களையும் இணைத்து மதிப்பீடு செய்கிறது. இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள வெப்ப அலை கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட குறிப்பிடத்தக்க அளவில் உயிரிழப்புகளை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயின் வெப்பம் பல பகுதிகளில் 40°C ஐத் தாண்டியுள்ள நிலையில் முதியவர்கள் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் வெளிப்புற வேலை செய்பவர்கள் மற்றும் சிறுவர்கள் அதிக ஆபத்தில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். போதுமான அளவு தண்ணீர் அருந்துதல் மதிய நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்த்தல் மற்றும் குளிர்ச்சியான இடங்களில் தங்குதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


































