சிறை நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற உள்ளக கலந்துரையாடலின் போது இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டதாகவும் தற்போது நாட்டின் சிறைச்சாலைகளில் 70 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை கொலை உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் தொடர்பில்லாத முதிய கைதிகளை விடுவிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்படும் நீண்டகால தாமதம் காரணமாக சிறிய அளவிலான போதைப்பொருள் வைத்திருந்த சிலர் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாக சிறையில் தங்கவைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறையே இதற்கு முக்கிய காரணம் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.































