புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துதல், சிகரெட் புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் ஆகியவை வாய்ப்புற்றுநோய்க்கான முக்கிய காரணிகளாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக வெற்றிலையுடன் சேர்த்து மெல்லப்படும் பாக்கில் உள்ள புற்றுநோய் உருவாக்கும் இரசாயனங்கள் உடலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் எச்சரித்தார்.Sri Lanka News
மேலும் தோட்டத் தொழிலாளர்கள், மீனவர்கள், மாணிக்க மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட சில தொழில்களில் ஈடுபடுவோர் அதிக ஆபத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிக மனஅழுத்தம், உடல் சோர்வு மற்றும் கடுமையான வேலைப்பளு காரணமாக புகையிலை, பாக்கு மற்றும் சிகரெட் பழக்கங்களுக்கு அவர்கள் அடிமையாகும் நிலை உருவாகுவதால் நோய் அபாயம் அதிகரிக்கிறது என்றார்.
வாயில் நீடித்த புண்கள், கட்டிகள், வெள்ளை அல்லது சிவப்பு நிறத் தழும்புகள் போன்ற மாற்றங்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிவது சிகிச்சை வெற்றியை அதிகரிக்கும் என்றும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.





























