பல மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு
இந்த தாழமுக்கப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கையின் கிழக்குக் கரையிலிருந்து விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தால் இன்று நாடு முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Sri Lanka weather forecast எச்சரிக்கையின்படி, இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களை குறைக்க பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை நேரத்தில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.































