விக்டோரியா கல்லூரியுடன் தொடர்புடைய பழைய மாணவர்களில் ஒருவரே பிரதம விருந்தினராக அழைக்கப்பட வேண்டும் என்றும் பாடசாலை நிர்வாகம் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் பாடசாலை அதிபர் சுலபாமதி வெளியிட்ட அறிக்கையில் எம்.ஏ. சுமந்திரன் இந்தியா பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்து, நடைபவனியில் கலந்துகொள்ள முடியாது என்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் தாங்கள் எந்தவொரு தனிநபரையும் எதிர்க்கவில்லை என்றும், 150ஆவது ஆண்டு விழா போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும் குறிப்பிட்டனர்.
அதேவேளை விழா ஒழுங்கமைப்பு குழு மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் கருத்துகள் பெறப்படாமல் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டதாகவும் அதனாலேயே ஜனநாயக ரீதியான இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பாடசாலை நிர்வாகம் பழைய மாணவர்களின் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கி எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.




























