சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவதற்கு எதிராக வெடித்தது போராட்டம்
யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறவிருந்த நடைபவனியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிராக பழைய மாணவர்கள் இன்று பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விக்டோரியா கல்லூரியுடன் தொடர்புடைய பழைய மாணவர்களில் ஒருவரே பிரதம விருந்தினராக அழைக்கப்பட வேண்டும் என்றும் பாடசாலை நிர்வாகம் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் பாடசாலை அதிபர் சுலபாமதி […]
