விசாரணைகளின் படி குறித்த பெண் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுடன் பழகி அவர்களை நம்பவைத்து ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகவும் பின்னர் அங்கு கணவனும் அவரது மச்சானும் திடீரென வந்து காணொளி பதிவு செய்து அவற்றை வெளியிடுவதாக மிரட்டி பணம் மற்றும் நகைகளை அபகரித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. அண்மையில் இதே முறையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு எதிராக ஏற்கனவே பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வரும் நிலையில், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



























