சுவிட்சர்லாந்து அகதி வருகை குறைவு 2026.
சுவிட்சர்லாந்தின் மாநில குடியேற்ற செயலகம் (SEM) அகதி விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக 83 பணியிடங்களை குறைத்துள்ளது.
இதில் 60 பணியிடங்கள் அகதி விண்ணப்பங்களை செயல்படுத்தும் பிரிவிலும் மேலும் 23 பணியிடங்கள் “Protection Status S” தொடர்பான வழக்குகளை கையாளும் பிரிவிலும் இடம்பெற்றிருந்தன. இந்த பணியிடங்கள் முன்பு அதிக அளவில் வந்த அகதி விண்ணப்பங்களை விரைவாக செயல்படுத்த தற்காலிகமாக உருவாக்கப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீப காலங்களில் சுவிட்சர்லாந்து அகதி வருகை விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், 2026ஆம் ஆண்டிலும் விண்ணப்பங்கள் குறைவாக இருக்கும் என அரசு எதிர்பார்க்கிறது. கடந்த ஆண்டில் சுமார் 25,781 அகதி விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன இது முந்தைய ஆண்டைவிட குறைவாகும்.
அகதி வருகை குறைவதால் நிலுவையில் இருந்த வழக்குகள் குறைந்துள்ளதால் கூடுதல் பணியாளர்களின் தேவை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்காலிக பணியிடங்கள் நீக்கப்பட்டதாக SEM விளக்கம் அளித்துள்ளது.





Leave a Reply