அஸ்தானாவில் இலங்கை தூதரகம் விரைவில்?
கசகஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் எதிர்காலத்தில் இலங்கை தூதரகத்தை நிறுவுவதற்கான எதிர்பார்ப்பு இருப்பதாகவும் அதன் மூலம் மத்திய ஆசிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் வாய்ப்பு உருவாகும் என்றும் சிவில் விமான சேவை மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். இலங்கை–கசகஸ்தான் நாடுகளுக்கு இடையிலான விமான சேவை சுற்றுலா மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (01) சிவில் விமான சேவை மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்றது. இதில் இலங்கைக்கான கசகஸ்தான் […]
