Tag: Clean Sri Lanka
நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் டெங்கு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் முழுமையாக ஒழிப்பதற்கும் ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு அமைச்சுக்கள், முப்படைகள் மற்றும் பொலிஸாரை இணைத்த விசேட கூட்டுத் திட்டம் அவசரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் மேல் மாகாணத்தில் டெங்கு பரவும் அபாயம் அதிகம் காணப்படும் 23 வலயங்களை இலக்காகக் கொண்டு தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளும் விசேட சுற்றிவளைப்புகளும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு மாவட்டத்தின் மகரகம, […]
அமைதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமெனில் ஒவ்வொரு குடிமகனும் தனது தாய்மொழியில் அரசுடன் தொடர்புகொண்டு அரச சேவைகளைப் பெறும் உரிமை நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் அரச அலுவலகங்களில் பொதுச் சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் 23 பொது மாதிரி விண்ணப்பப் படிவங்கள் சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டதை முன்னிட்டு இன்று (01) […]
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்காக 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளின் வரவு-செலவுத் திட்டங்கள் மூலம் மொத்தமாக ரூபா 11.5 பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தபோதிலும் நாட்டில் டெங்கு பரவல் கட்டுக்கடங்காத அளவில் அதிகரித்துள்ளதாகவும் டெங்கு காரணமாக ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பிற்கும் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் அறிக்கையின்படி நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் […]
கிளீன் ஸ்ரீலங்கா – மத்திய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு. முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் நேற்றைய தினம் முற்பகல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. 424 மில்லியன் ரூபாய் செலவில் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் பல அரசு நிறுவனங்களின் ஒத்துழைப்பில் மற்றும் இலங்கை விமானப் படையின் ஆதரவுடன் 24 மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட பணிகளின் மூலம் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே நிறைவு செய்யப்பட்டது. தினமும் சுமார் 75,000 பயணிகள் மற்றும் 2,000 பஸ்கள் […]
இலங்கையைக் காப்போம் – வலுசக்தி பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டம் வலு சக்தியை சிக்கனமாகப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட “இலங்கையைக் காப்போம்” தேசிய வேலைத்திட்டம் நேற்றைய தினம் (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் பிரதான நோக்கம் வலுசக்தி வளங்களை பாதுகாக்கும் சமூகத்தை உருவாக்குவதாகும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய “எல்-நினோ” வானிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு, நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகளை குறைக்கும் நோக்கில் […]