மும்மொழிச் சேவைகள் மூலம் சம உரிமை உறுதி
அமைதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமெனில் ஒவ்வொரு குடிமகனும் தனது தாய்மொழியில் அரசுடன் தொடர்புகொண்டு அரச சேவைகளைப் பெறும் உரிமை நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் அரச அலுவலகங்களில் பொதுச் சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் 23 பொது மாதிரி விண்ணப்பப் படிவங்கள் சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டதை முன்னிட்டு இன்று (01) […]
