Tag: Finance News
Crypto Rules, மெய்நிகர் சொத்துகள் (Virtual Assets) மற்றும் கிரிப்டோ (Cryptocurrency) சேவை வழங்குநர்களை சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிமுகப்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான சட்ட ஏற்பாடுகளை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் கிரிப்டோ பரிவர்த்தனைகள் பெரும்பாலும் வெளிநாட்டு தளங்கள் மற்றும் நேரடி (P2P) பரிவர்த்தனைகள் மூலமாக நடைபெற்று வருகின்றன. இவை இதுவரை நாட்டின் ஒழுங்குமுறை அமைப்பிற்கு வெளியே செயல்பட்டு வந்ததால், பணமோசடி, சட்டவிரோத […]
EPF ETF ஆய்வு மேற்கொள்வதற்காக அரசாங்கம் விசேட ஆய்வுக்குழுவொன்றை நியமித்துள்ளது. ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) தொடர்பான தற்போதைய நடைமுறைகள், முதலீட்டு முகாமைத்துவம் மற்றும் உறுப்பினர்களுக்கான நன்மைகள் குறித்து விரிவாக ஆராய்வதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும். அரசாங்கத்தின் கூற்றுப்படி இந்த ஆய்வு மூலம் நிதிகளின் செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் எதிர்கால மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து பரிந்துரைகள் பெறப்படவுள்ளன. இதன் மூலம் உறுப்பினர்களின் சேமிப்புகளை மேலும் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் நிர்வகிக்க […]
தங்க விலை உயர்வு இலங்கையில் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்ததன் தாக்கம் உள்ளூர் சந்தையிலும் பிரதிபலித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குவோர் மத்தியில் அதிக கவனம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸுக்கு சுமார் 4,325 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளதையடுத்து இலங்கையில் தங்க விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. தங்க வர்த்தகர்களின் தகவலின்படி இன்று (15) காலை 9.00 மணியளவில் பதிவான விலையுடன் ஒப்பிடுகையில் உள்ளூர் சந்தையில் தங்கத்தின் […]
அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) பெற்ற சம்பளம் 2025ஆம் ஆண்டில் மீண்டும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று காட்டியுள்ளது. Associated Press மற்றும் Equilar இணைந்து வெளியிட்ட தரவுகளின்படி S&P 500 நிறுவன CEOக்களின் நடுத்தர ஆண்டு ஊதியம் 5.9 சதவீதம் உயர்ந்து 17.7 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதேவேளை சாதாரண ஊழியர்களின் நடுத்தர வருமானம் சுமார் 89,744 டொலராக இருந்தது. இதனால் பல நிறுவனங்களில் CEOக்கள் தங்களது […]