Tag: Monaragala
இலங்கை வெப்ப எச்சரிக்கை, கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி நாளை (ஆகஸ்ட் 01) பகல் நேரத்தில் குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை (Heat Index) சில இடங்களில் “எச்சரிக்கை நிலை” (Caution Level) வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச் சுட்டெண் (Heat Index) என்பது காற்றின் ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச […]
போதைப்பொருளுடன் இளைஞர் கைது, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ.14.8 மில்லியன் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளை கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் இன்று காலை 9.25 மணியளவில் தாய்லாந்தின் பாங்காக் நகரிலிருந்து இலங்கைக்கு வந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது பயணப்பொதியை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டபோது மொத்தம் 1.480 கிலோகிராம் எடையுடைய ‘குஷ்’ […]
Sri Lanka News,மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (10) இடைக்கிடையே பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை நிலை தொடரும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதிக […]
SriLanka Weather news,மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொணராகலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு நாளை (09) பகல் வேளையில் அதிக வெப்பம் உணரப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விசேட வெப்ப எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும் வெப்பக் குறியீடு (Heat Index) சில பகுதிகளில் எச்சரிக்கை நிலை வரை உயரக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்த வெப்பக் குறியீடு காற்றின் ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு மனித உடல் உணரும் வெப்பத்தின் அளவை […]
மொனராகலை மாவட்டத்தில் டித்வா இழப்பீட்டு வழங்கல் நடவடிக்கைகளில் முறைகேடு இடம்பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அனர்த்த நிவாரண சேவை அதிகாரியின் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் இந்த விவகாரத்துடன் தொடர்புடைய கிராம சேவகரும் விசாரணைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் உடனடியாக அமுலுக்கு வரும் நிலையில் மற்றொரு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டு தொகைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் நிர்வாக […]