மொனராகலை பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் இன்று காலை 9.25 மணியளவில் தாய்லாந்தின் பாங்காக் நகரிலிருந்து இலங்கைக்கு வந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது பயணப்பொதியை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டபோது மொத்தம் 1.480 கிலோகிராம் எடையுடைய ‘குஷ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டது.
இந்த போதைப்பொருள் சாக்லேட் பூசப்பட்ட சாசேஜ் வடிவில் தயாரிக்கப்பட்டு பிரபல சாக்லேட் பிராண்டின் பெயர் அச்சிடப்பட்ட பொதிகளில் மறைத்து கடத்த முயற்சிக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






























