நீண்ட நேரம் கடும் வெயிலில் இருப்பது அல்லது வெளிப்புறங்களில் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுவது உடல் சோர்வு, வெப்பப் பிடிப்பு (Heat Cramps) உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.எனவே பொதுமக்கள் போதியளவு தண்ணீர் அருந்தி உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பாக பகல் நேரங்களில் கடுமையான வெளிப்புற உடல் உழைப்பை முடிந்தவரை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.SriLanka Weather news
3 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை
SriLanka Weather news,மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொணராகலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு நாளை (09) பகல் வேளையில் அதிக வெப்பம் உணரப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விசேட வெப்ப எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும் வெப்பக் குறியீடு (Heat Index) சில பகுதிகளில் எச்சரிக்கை நிலை வரை உயரக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்த வெப்பக் குறியீடு காற்றின் ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு மனித உடல் உணரும் வெப்பத்தின் அளவை கணக்கிட்டு வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.































