சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

இலங்கை வெப்ப எச்சரிக்கை, கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி நாளை (ஆகஸ்ட் 01) பகல் நேரத்தில் குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை (Heat Index) சில இடங்களில் “எச்சரிக்கை நிலை” (Caution Level) வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பச் சுட்டெண் (Heat Index) என்பது காற்றின் ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது உண்மையான வெப்பநிலையை விட உடலுக்கு உணரப்படும் வெப்பத்தின் அளவை பிரதிபலிக்கும். நீண்ட நேரம் வெயிலில் இருப்பது மற்றும் அதிக உடல் உழைப்புடன் கூடிய வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவது உடல் சோர்வை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் வெப்பத்தால் ஏற்படும் தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் போதுமான அளவு நீரை அருந்துமாறும் அதிக வெப்ப நேரங்களில் கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்