Tag: PTA
விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அசாத் மௌலானா தொடர்பாக புதிய தகவல்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து காவலில் வைப்பதைத் தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த ரிட் மனு நேற்று (09) நான்காவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத் முக்கிய விடயங்களை முன்வைத்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனக் டி […]
சர்வதேச சட்டங்களுக்கு இணங்கும் வகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை விரைவாக கொண்டு வரத் தவறினால் இலங்கையின் GSP+ வரிச்சலுகை ஆபத்துக்குள்ளாகும் என முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எச்சரித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் அண்மையில் பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றதாகக் கூறினார். மக்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் மற்றும் பிற நிவாரணங்களை குறைக்கவோ நிறுத்தவோ அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க வேண்டாம் […]
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த எழுத்தாணை மனு மேலதிக விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வழக்கின் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்து […]
முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் எவருக்கும் எதிர்ப்பு இல்லை என்றாலும் விசாரணை என்ற பெயரில் அநீதி அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறக் கூடாது என தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மைகள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதியான மற்றும் வெளிப்படையான விசாரணைகளே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் யுத்தம் […]
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி மன்னாரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. “பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராகவும் பாடகர் சங்கீதன் விடுதலை செய்யக் கோரியும்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போராட்டம் எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு மன்னார் பஸ் தரிப்பு நிலையத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலைச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் நோக்கில் […]