சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி மன்னாரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. “பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராகவும் பாடகர் சங்கீதன் விடுதலை செய்யக் கோரியும்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போராட்டம் எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு மன்னார் பஸ் தரிப்பு நிலையத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பாடலொன்றைப் பாடியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள சங்கீதனை விடுதலை செய்ய வேண்டும் என்பதுடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்பதையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தவுள்ளனர். “கலை குற்றமல்ல” “பாடலுக்காக கைது செய்யாதே” போன்ற கோஷங்களுடன் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.














📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்