சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

ரஷ்யாவின் இரண்டாவது பெரிய வங்கியான வி.டி.பி. (VTB) வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரே கோஸ்டின் தற்போதைய பொருளாதார சவால்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் தடைகள் இருந்தபோதிலும் ரஷ்ய பொருளாதாரம் அவற்றை சமாளிக்கும் திறன் கொண்டதாக இருப்பதாக தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவிக்கையில் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் முதலீட்டு வீழ்ச்சி காரணமாக 2026 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையை சந்திக்கக்கூடும்

என்றாலும் பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் மற்றும் வட்டி விகிதங்கள் குறையத் தொடங்கியதும் நிலைமை மேம்படும் என நம்பிக்கை வெளியிட்டார். மேலும் சீனா மற்றும் அரபு நாடுகளிலிருந்து ரஷ்யாவுக்கு முதலீட்டு ஆர்வம் அதிகரித்து வருவதாகவும் குறிப்பாக உக்ரைன் போர் முடிவடைந்த பின்னர் வெளிநாட்டு முதலீடுகள் கணிசமாக உயரும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களை பயன்படுத்தும் முயற்சிகளை அவர் கடுமையாக விமர்சித்ததுடன் உலகளாவிய நிதி ஒழுங்கமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு பல நாடுகள் அமெரிக்க டொலருக்கு மாற்றாக பிற நாணயங்களை நோக்கி நகர்ந்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார். தற்போதைய அழுத்தங்கள் இருந்தாலும் நீண்டகால அடிப்படையில் ரஷ்ய பொருளாதாரம் நிலைத்தன்மையைத் தக்கவைத்து மீட்சியடையும் என்ற நம்பிக்கையை ஆண்ட்ரே கோஸ்டின் வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்