Tag: Sri Lankan Parliament
Sri Lanka News,மாகாண சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி எதுவும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை மீளக் கட்டியெழுப்பவும் நன்கொடையாளர்களிடமிருந்து கிடைத்த அனைத்து நிதியுதவிகளும் திறைசேரியின் பிரதி செயலாளர் மேற்பார்வையில் பராமரிக்கப்படும் விசேட கணக்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த நிதி தேசிய முன்னுரிமைகள் மற்றும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காணப்படும் திட்டங்களுக்கு […]
கச்சத்தீவு இறையாண்மை விவகாரம் சர்வதேச சட்டம் (International Law) மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்கள் (Bilateral Agreements) அடிப்படையில் ஏற்கனவே தீர்க்கப்பட்ட விடயமாகும் என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (Sri Lanka Muslim Congress – SLMC) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநிலத்திற்கு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டுள்ள ஹக்கீம் சென்னையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போது மீனவர் பிரச்சினைகள் எழும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கச்சத்தீவு இறையாண்மை விவகாரம் குறித்து […]
பிரபாகரனின் மகனான சிறுவன் பாலச்சந்திரன் போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டிருந்தால் அது யுத்தக் குற்றமாகக் கருதப்பட்டு முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இதன்போது தமிழ் நாளிதழில் வெளியான செய்தியை சபையில் சுட்டிக்காட்டிய அவர் […]