இந்த நிதி தேசிய முன்னுரிமைகள் மற்றும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காணப்படும் திட்டங்களுக்கு வெளிப்படையான முறையில் பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்தல், சேதமடைந்த அரச கட்டமைப்புகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை மீளமைத்தல் ஆகியவை இந்த நிதியின் முக்கிய பயன்பாட்டு துறைகளாக இருக்கும் என பிரதமர் மேலும் விளக்கினார்.அனைத்து நிதி முகாமைத்துவ நடவடிக்கைகளும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சி கொள்கைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.Sri Lanka News
தேர்தல் நிதி பேரிடர் நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படவில்லை பிரதமர் ஹரிணி விளக்கம்
Sri Lanka News,மாகாண சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி எதுவும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை மீளக் கட்டியெழுப்பவும் நன்கொடையாளர்களிடமிருந்து கிடைத்த அனைத்து நிதியுதவிகளும் திறைசேரியின் பிரதி செயலாளர் மேற்பார்வையில் பராமரிக்கப்படும் விசேட கணக்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.


































