Tag: Train Accident
நுவரெலியா மாவட்டத்தின் அம்பேவெல பகுதியில் இன்று (19) காலை நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தொடருந்தில் செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் தவறி கீழே விழுந்து காயமடைந்துள்ளார். சம்பவத்தைத் தொடர்ந்து தொடருந்து ஊழியர்களும் அதிகாரிகளும் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் காயமடைந்த சுற்றுலாப் பயணி மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை அடுத்து மலையக தொடருந்து பாதையில் பயணம் செய்யும் பயணிகள் குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் […]
சிலாபம் பகுதியில் இருந்து இன்று (09) காலை கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதி ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கப்புவத்தை மற்றும் கந்தானை புகையிரத நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள புகையிரத கடவையை முச்சக்கர வண்டி கடக்க முயன்றபோது இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மோதலின் தாக்கத்தால் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்ததுடன் அதில் பயணித்திருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து […]
வனவாசல உப தொடருந்து நிலையத்திற்கு அருகில் இன்று (16) இடம்பெற்ற தொடருந்து விபத்துக்கு தடம் மாற்றும் அமைப்பின் இணைப்பு கம்பிகள் கழற்றப்பட்டிருந்தமையே காரணம் என தொடருந்து திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு திண்மக் கழிவு பதப்படுத்தும் வளாகத்துக்கும் பிரதான தொடருந்து பாதைக்கும் இடையில் தொடருந்துகளை தடம் மாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் இணைப்பு கம்பிகள் யாரோ ஒருவர் அல்லது ஒரு குழுவினரால் திட்டமிட்டோ அல்லது திருடும் நோக்கிலோ கழற்றப்பட்டிருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் […]
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இடம்பெற்ற பாரிய ரயில் விபத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்காசான் (Makkasan) ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவைப் பகுதியில் இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பொதுப் போக்குவரத்து பேருந்தொன்று ரயில் பாதையை கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த சரக்கு ரயில் பேருந்தில் மோதி இழுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. மோதி தாக்கிய உடனேயே பேருந்தில் தீப்பற்றியதுடன் அருகில் இருந்த சில வாகனங்களும் […]
சுவிட்சர்லாந்தில் ரயிலில் மோதிய நபர் உயிரிழப்பு சுவிட்சர்லாந்தின் பெர்ன் (Bern) மாகாணத்தில் உள்ள Burgdorf ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற துயர சம்பவத்தில் ஒரு நபர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். ஆரம்ப தகவல்களின் படி பலர் கொண்ட குழு ஒன்று தளத்தில் நின்றுகொண்டிருந்தபோது அதில் இருந்த ஒருவர் திடீரென தடத்தில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் உடனடியாக அவசர நிறுத்தம் செய்தபோதிலும் அந்த நபர் கடுமையாக காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் விபத்தா அல்லது […]