சம்பவ இடத்திற்கு உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அனுப்பப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் பேருந்தில் பயணித்தவர்களே என தெரிவிக்கப்படுகின்றது. ஆரம்பகட்ட விசாரணைகளின் படி கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பேருந்து ரயில் பாதையில் நின்றிருந்ததாகவும் அதனால் பாதுகாப்பு தடுப்புகள் சரியாக மூடப்படாதிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த விபத்து தொடர்பில் தாய்லாந்து போக்குவரத்து அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாய்லாந்தில் சரக்கு ரயில் பேருந்தில் மோதி விபத்து – குறைந்தது 8 பேர் பலி பலர் காயம்
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இடம்பெற்ற பாரிய ரயில் விபத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்காசான் (Makkasan) ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவைப் பகுதியில் இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பொதுப் போக்குவரத்து பேருந்தொன்று ரயில் பாதையை கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த சரக்கு ரயில் பேருந்தில் மோதி இழுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. மோதி தாக்கிய உடனேயே பேருந்தில் தீப்பற்றியதுடன் அருகில் இருந்த சில வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
































