Tag: Trincomalee
நாட்டில் தென்மேற்கு பருவக்காற்று நிலைமை தீவிரமடைந்துள்ளதால் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று சனிக்கிழமை (04) முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (05) காலை 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய, வட மற்றும் வடமத்திய மாகாணங்களுடன், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் […]
2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் திருகோணமலை ஸாஹிரா கல்லூரியைச் சேர்ந்த 70 முஸ்லிம் மாணவிகளின் பரீட்சை முடிவுகள் அவர்கள் ஹிஜாப் அணிந்து பரீட்சைக்குத் தோன்றியதாகக் கூறி இடைநிறுத்தப்பட்ட சம்பவத்தில் மாணவிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மாணவிகளின் மதம் அல்லது நம்பிக்கையைப் பின்பற்றும் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், சட்டத்தின் முன் […]
Sri Lanka News, திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு உரிய முறையில் மருந்து வழங்கப்படவில்லை எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. குறித்த காணொளியில் 2026 ஜூன் 26 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் 11.20 மணி வரை நோயாளி காத்திருக்கச் சொல்லப்பட்டதுடன் 97 சிராஜ் நகர் மக்களுக்கு மருந்து வழங்க முடியாது என தெரிவித்து மருந்து வழங்க மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த […]
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பைசல்நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு அதிரடிச் சோதனை நடவடிக்கைகளின் போது 16 கிராம் 310 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் அதனை விற்பனை செய்து பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 105,310 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டதுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான முச்சக்கரவண்டி ஓட்டுநரின் வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையின் போது அவரது மனைவி பயன்படுத்தும் வாசனைத் திரவியங்களுக்கிடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிராம் […]
பலத்த காற்று எச்சரிக்கை நாட்டின் பல பகுதிகளுக்கு வெளியிடப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சில மாகாணங்களிலும் கடலோரப் பகுதிகளிலும் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இந்த நிலைமை காணப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மரங்கள் முறிவடைவது, மின் கம்பங்கள் சேதமடைவது மற்றும் போக்குவரத்துக்கு […]