அமெரிக்க எரிபொருள் வர்த்தகர் – மெக்சிகோ கார்டெல் இணைப்பு சந்தேகம்
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரத்தை தளமாகக் கொண்ட எரிபொருள் வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கும் மெக்சிகோவின் சக்திவாய்ந்த ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் (CJNG) போதை கும்பலுக்கும் இடையே சந்தேகத்திற்கிடமான வர்த்தகத் தொடர்புகள் இருந்திருக்கலாம் என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ராய்ட்டர்ஸ் வெளியிட்ட விசாரணை அறிக்கையின்படி Ikon Midstream என்ற நிறுவனம் டீசல் மற்றும் நாப்தா போன்ற எரிபொருட்களை “லூப்ரிகண்ட்” (Lubricant) என தவறாக அறிவித்து மெக்சிகோவுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மெக்சிகோவில் விதிக்கப்படும் உயர்ந்த இறக்குமதி வரிகளை […]
