யோஷித்த ராஜபக்ஷ பணமோசடி வழக்கு விசாரணை ஜூலை 9 வரை ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது. மேல் நீதிமன்ற நீதியரசர் உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இன்று (04) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதிவாதி தரப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மறுசீரமைப்பு மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்தார். […]
