ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இத்தகைய நிலை ஏற்படும்போது, சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்ற கேள்வி எழுகிறது என சீமான் தெரிவித்தார். பெண்கள், பொதுமக்கள் மட்டுமின்றி காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் காணப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
வழிபாட்டு உரிமையை அரசு சுமுகமாக கையாள வேண்டும்
மத நல்லிணக்கம் மற்றும் வழிபாட்டு உரிமை தொடர்பான விவகாரத்தை அரசு முதிர்ச்சியுடன் கையாள்ந்திருக்க வேண்டும். இதை தடியடி நடத்தும் அளவுக்கு கொண்டு சென்றிருக்கத் தேவையில்லை என்றும் சீமான் கூறினார்.
சிக்கந்தர் தர்காவில் வழிபடுபவர்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும், முருகனுக்கு விளக்கேற்றுபவர்களுக்கு உரிய பாதுகாப்புடனும் அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் பிரச்சனை அப்போதே முடிவுக்கு வந்திருக்கும் என அவர் தெரிவித்தார். இந்த Tirupparankundram issue தொடர்பாக இரு சமயப் பெரியவர்களையும் அழைத்துப் பேசி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தினார்.































