அமெரிக்கா ஈரான் உடன்பாடு இறுதி கட்டத்தை நெருங்கி வருவதாக டிரம்ப் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் டிரம்ப் புடின் வார்த்தை நடைபெறும்போது அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்பு பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்கொப் மற்றும் ஜாரெட் குஷ்னர் விரைவில் ரஷ்யாவுக்கு மீண்டும் வருகை தரவுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டதாக கிரெம்லின் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போர், ஈரான் விவகாரம் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இந்த உரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.































